விரல்களின் இறுக்கங்களைத் தளரச்செய்யும் தாரக தந்திரம்....
அது என்னவோ....
நீ விரல் பிடித்து ஒடித்துச் செல்லும் சொடக்குகளின் சத்தங்கள் மட்டும் உன் பெயர் சொல்லியே ஒலிக்கிறது....
சில நேரங்களில்....
வலி உயிர்போகும் மனசு மட்டும் சிரித்துக்கொள்ளும்...
இந்த மெல்லிய விரல்களில் இருந்தா இந்த வலி.....
ஊரிலிருந்து திரும்பியதும்....
ஊர்கண்ணே பிள்ளைமேலத்தான்...
என்று
உச்சி முகர்ந்து
முகம் தழுவி நீ போடுவாயே உன் நெற்றிப்பொட்டில் வைத்து ஒரு சொடக்கு.....
சத்தியமாய் சொல்கிறேன்....
அதில் தெரிவது....
என் மீதிலான கண்ணாறல்ல...
நீ என் மீது வைத்திருக்கும்
பாசம்....
செல்வம்
Friday, June 8, 2018
Thursday, June 7, 2018
பிறழ்ந்த பிறவி
ஏதோ ஒரு புள்ளியில் நாங்கள் பிறழ்ந்து போகிறோம்....
மங்கையர்களின் உவமானமாகிய எங்களின் உயிர்கள் பறிக்கப்படுவதே தப்பென்று உணராத சமூகத்தில் நாங்களும் அடிமைகளே...
கடவுள் கேட்காத பூவும் மாலையும்.....உனக்கென்ன வந்தது....
உன் விரல்களை வெட்டிக்கொடுப்பாயா....?
எந்த சடலம் கேட்டது மாலையும் மரியாதையும்....
உயிருடன் உலவும்போது மதிக்காத மனிதனுக்கு மரணத்தில் மட்டும் எதற்கு இந்த வெளி வேஷம்....
நாங்களும் இரவில் உறங்கி விடியலில் மலர்பவர்கள்தான்....
எங்கள் வாசங்களைக் கற்சிலையிலும் உயிரற்ற சடலத்திலும் பூசிவிடாதீர்கள்.....
நாங்கள் தினமும் மலரும் உயிர்மலர்கள்....ஒற்றுமையை உயிர்ப்பிக்கும் பூ மாலைகள்....
எங்களுக்கும் உயிர் சிலைகளும் உயிர் தோள்களும் கொடுங்கள்....மாலையாக....
ராமனைப் போன்ற உயர்ந்த மனித கழுத்தில்லாவிட்டாலும் ராவணன் போன்ற அரசியல்வாதி கழுத்தாவது கொடுங்கள்....
நாங்கள் இறப்பதற்கு முன் இன்னொரு முறை வாழவேண்டும்.....
*செல்வம்*
மங்கையர்களின் உவமானமாகிய எங்களின் உயிர்கள் பறிக்கப்படுவதே தப்பென்று உணராத சமூகத்தில் நாங்களும் அடிமைகளே...
கடவுள் கேட்காத பூவும் மாலையும்.....உனக்கென்ன வந்தது....
உன் விரல்களை வெட்டிக்கொடுப்பாயா....?
எந்த சடலம் கேட்டது மாலையும் மரியாதையும்....
உயிருடன் உலவும்போது மதிக்காத மனிதனுக்கு மரணத்தில் மட்டும் எதற்கு இந்த வெளி வேஷம்....
நாங்களும் இரவில் உறங்கி விடியலில் மலர்பவர்கள்தான்....
எங்கள் வாசங்களைக் கற்சிலையிலும் உயிரற்ற சடலத்திலும் பூசிவிடாதீர்கள்.....
நாங்கள் தினமும் மலரும் உயிர்மலர்கள்....ஒற்றுமையை உயிர்ப்பிக்கும் பூ மாலைகள்....
எங்களுக்கும் உயிர் சிலைகளும் உயிர் தோள்களும் கொடுங்கள்....மாலையாக....
ராமனைப் போன்ற உயர்ந்த மனித கழுத்தில்லாவிட்டாலும் ராவணன் போன்ற அரசியல்வாதி கழுத்தாவது கொடுங்கள்....
நாங்கள் இறப்பதற்கு முன் இன்னொரு முறை வாழவேண்டும்.....
*செல்வம்*
Wednesday, June 6, 2018
அச்சம்
என்னங்க
தெருவுல என்னமோ
சண்டைங்க..
கதவ சாத்துடி
தெருவுல போற தேர
வீட்டுக்குள்ள
இழுத்துவுடாதடி...
இப்படித்தான்
இருக்குது
எல்லோருக்கும்
அச்சம்.....
போஸ்ட் ஆபிஸ் போறமாரி
போலீஸ் ஸ்டேசன் போவமுடியுமா....
அச்சத்துல அசையாம கெடக்குது சமுதாயம்
வெட்டுபட்ட ரெண்டுபேரும்
ஒன்னாதான் கிடக்கறான்
அஞ்சாம் நம்பர் வார்டுல
இவனால அவனுக்கும்
அவனால இவனுக்கும்
அச்சம்
என்னதான் தீர்வு
எதுதான் முடிவு....
சிரிக்காதிங்க.....
இன்னொரு
அல்ட்ராமேனோ...
சூப்பர்மேனோ....
வரமாட்டானான்னு...
ஏங்குது
மனசு
மீண்டும்
குழந்தையாய்
அச்சம் தவிர்க்க
செல்வம்
தெருவுல என்னமோ
சண்டைங்க..
கதவ சாத்துடி
தெருவுல போற தேர
வீட்டுக்குள்ள
இழுத்துவுடாதடி...
இப்படித்தான்
இருக்குது
எல்லோருக்கும்
அச்சம்.....
போஸ்ட் ஆபிஸ் போறமாரி
போலீஸ் ஸ்டேசன் போவமுடியுமா....
அச்சத்துல அசையாம கெடக்குது சமுதாயம்
வெட்டுபட்ட ரெண்டுபேரும்
ஒன்னாதான் கிடக்கறான்
அஞ்சாம் நம்பர் வார்டுல
இவனால அவனுக்கும்
அவனால இவனுக்கும்
அச்சம்
என்னதான் தீர்வு
எதுதான் முடிவு....
சிரிக்காதிங்க.....
இன்னொரு
அல்ட்ராமேனோ...
சூப்பர்மேனோ....
வரமாட்டானான்னு...
ஏங்குது
மனசு
மீண்டும்
குழந்தையாய்
அச்சம் தவிர்க்க
செல்வம்
Tuesday, June 5, 2018
முதிராத கனவுகள்
ஒவ்வொரு விடியலும் கடந்து போகிறது காத்திருப்புகளின் இடைவெளிகளில்....
எங்கள் மகரந்தங்களை அடைகாத்திருக்கும் செவ்விதழ்கள் ஒரு நாள் மலர்ந்திடும் என்ற நம்பிக்கை வாசத்தில்
நிழல் பிம்பங்கள்....
எங்கள் ஜன்னல் கம்பிகளில் படர்ந்து வளர்ந்திருப்பதெல்லாம் எதிர்பார்ப்புகளின் கண்ணீர் துளிகளே....
எங்கள் உணர்வுகளுக்குத்
தெரிவதில்லை எங்கள்
ஏழ்மையின் விலாசங்கள்....
தலையணை கனவுகள் மட்டுமே இரவுகளின் நீளங்களை நீட்டிக்கிறது...
வைகறை நிராகரித்த வசந்தங்களில் நாங்கள் இன்னும்.....
மலராத மொட்டுகள்
செல்வம்
எங்கள் மகரந்தங்களை அடைகாத்திருக்கும் செவ்விதழ்கள் ஒரு நாள் மலர்ந்திடும் என்ற நம்பிக்கை வாசத்தில்
நிழல் பிம்பங்கள்....
எங்கள் ஜன்னல் கம்பிகளில் படர்ந்து வளர்ந்திருப்பதெல்லாம் எதிர்பார்ப்புகளின் கண்ணீர் துளிகளே....
எங்கள் உணர்வுகளுக்குத்
தெரிவதில்லை எங்கள்
ஏழ்மையின் விலாசங்கள்....
தலையணை கனவுகள் மட்டுமே இரவுகளின் நீளங்களை நீட்டிக்கிறது...
வைகறை நிராகரித்த வசந்தங்களில் நாங்கள் இன்னும்.....
மலராத மொட்டுகள்
செல்வம்
Monday, June 4, 2018
கண்கள்
என் கண்கள்
எனக்கு சொந்தமில்லை
என் பார்வை மட்டுமே
எனக்கானது
இருண்டிருந்த என் உலகத்தை
வெளிச்சமாக்கிய உன்னதம்
இந்த கண்களுக்குண்டு
கண்களில்
கரிசனம் கண்டிருப்பீர்கள்
இந்த கண்களே கரிசனம்தான்
என் பார்வையில்
உலகமே அழகாக தெரிந்தும்
என் கண்களுக்கு அமைதியில்லை
என் பார்வை இருகரம்கூப்பி
நன்றி சொல்ல நினைக்கும்
என் கண்களுக்கு சொந்தக்காரர்
செத்தும் கொடுத்த சீதக்காதி
நான்
கண்தானம் பெற்றவன்
செல்வம்
எனக்கு சொந்தமில்லை
என் பார்வை மட்டுமே
எனக்கானது
இருண்டிருந்த என் உலகத்தை
வெளிச்சமாக்கிய உன்னதம்
இந்த கண்களுக்குண்டு
கண்களில்
கரிசனம் கண்டிருப்பீர்கள்
இந்த கண்களே கரிசனம்தான்
என் பார்வையில்
உலகமே அழகாக தெரிந்தும்
என் கண்களுக்கு அமைதியில்லை
என் பார்வை இருகரம்கூப்பி
நன்றி சொல்ல நினைக்கும்
என் கண்களுக்கு சொந்தக்காரர்
செத்தும் கொடுத்த சீதக்காதி
நான்
கண்தானம் பெற்றவன்
செல்வம்
Sunday, June 3, 2018
தீர்ப்பு
திருத்தப்படும்போது
நீதி தோற்றுப்போனது
தீர்ப்புகள்
மறுக்கப்பட்டபோது
சுதந்திரம் தோற்றுப்போனது
தீர்ப்புகள்
தள்ளிப்போனபோது
காலம் தோற்றுப்போனது
தீர்ப்புகள்
தீர்மானிக்கப்படும்போது
சட்டம் தோற்றுப்போனது
தீர்ப்புகள்
தடுக்கப்பட்டபோது
உரிமை தோற்றுப்போனது
தீர்ப்புகள்
உணரப்படாதபோது
உண்மை தோற்றுப்போனது
தீர்ப்புகள்
மதிக்கப்படாதபோது
மனிதம் தோற்றுப்போனது
தீர்ப்புகள்
திசைமாறும்போது
இயற்கை
தன் குணம் மாறுகிறது
மரணமே
தீர்ப்பு............
செல்வம்
நீதி தோற்றுப்போனது
தீர்ப்புகள்
மறுக்கப்பட்டபோது
சுதந்திரம் தோற்றுப்போனது
தீர்ப்புகள்
தள்ளிப்போனபோது
காலம் தோற்றுப்போனது
தீர்ப்புகள்
தீர்மானிக்கப்படும்போது
சட்டம் தோற்றுப்போனது
தீர்ப்புகள்
தடுக்கப்பட்டபோது
உரிமை தோற்றுப்போனது
தீர்ப்புகள்
உணரப்படாதபோது
உண்மை தோற்றுப்போனது
தீர்ப்புகள்
மதிக்கப்படாதபோது
மனிதம் தோற்றுப்போனது
தீர்ப்புகள்
திசைமாறும்போது
இயற்கை
தன் குணம் மாறுகிறது
மரணமே
தீர்ப்பு............
செல்வம்
Saturday, June 2, 2018
நாட்டுப்பற்று
இது
என் நாடு
இங்கேதான்
எனக்கு எல்லாமே
கற்றுத்தரப்படுகின்றன
எனக்கான
தாய்மொழியை
எனதுயிர்
தமிழ்மொழியை
அடுத்த தலைமுறைக்கும்
கற்றுத்தருகிறது
என் நாடு...
கற்றுக்கொள்ளத்தான்
மனசில்லை
எங்களில் பலருக்கு
மேகம் தொடும் மலைகளும்
பசுமை கொஞ்சும் காடுகளும்
நீர்வளமாய் நதிகளும்
காய்ந்து கனிந்த மரங்களும்
பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையும்
தென்றலாய் காற்றும்
பனியாய் மழையையும்
இயற்கை தாயின் வரம்
என் நாடு...
வெளியில்
சென்ற பெரிய பையனுக்கு
கொஞ்சம் ஈரலோடு கோழிக்கறி
எடுத்து வைப்பாளே தாய்
அதைப் போல
அந்த சமூகத்திற்கு கொஞ்சம்
அதிகமாகவே கொடுத்தாலும்
சின்னப்பிள்ளைகளான
எங்களைப் பட்டினி போட்டதில்லை
என் (தாய்) நாடு
நாடென்ன
செய்தது நமக்கு
என்ற
கேள்விக்கேயிடமில்லாமல்
நாடு நிறையவே
செல்வம்
என் நாடு
இங்கேதான்
எனக்கு எல்லாமே
கற்றுத்தரப்படுகின்றன
எனக்கான
தாய்மொழியை
எனதுயிர்
தமிழ்மொழியை
அடுத்த தலைமுறைக்கும்
கற்றுத்தருகிறது
என் நாடு...
கற்றுக்கொள்ளத்தான்
மனசில்லை
எங்களில் பலருக்கு
மேகம் தொடும் மலைகளும்
பசுமை கொஞ்சும் காடுகளும்
நீர்வளமாய் நதிகளும்
காய்ந்து கனிந்த மரங்களும்
பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையும்
தென்றலாய் காற்றும்
பனியாய் மழையையும்
இயற்கை தாயின் வரம்
என் நாடு...
வெளியில்
சென்ற பெரிய பையனுக்கு
கொஞ்சம் ஈரலோடு கோழிக்கறி
எடுத்து வைப்பாளே தாய்
அதைப் போல
அந்த சமூகத்திற்கு கொஞ்சம்
அதிகமாகவே கொடுத்தாலும்
சின்னப்பிள்ளைகளான
எங்களைப் பட்டினி போட்டதில்லை
என் (தாய்) நாடு
நாடென்ன
செய்தது நமக்கு
என்ற
கேள்விக்கேயிடமில்லாமல்
நாடு நிறையவே
செல்வம்
Friday, June 1, 2018
உடன்பிறப்பு
என்
துயரங்களின் தோழனே....
உன்
துணையுடன்தான்
என் எல்லாவற்றையும்
நான் கடந்திருக்கிறேன்...
நான்
தனியாள் இல்லை
என்பதனை எனக்கு
உணர்த்திச்செல்லும்
தாய்கரங்களாய்
என் தலைகோதியது நீதான்
இரவுகளின் இருட்டுகளில்
நிகழ்ந்த
நமது ஒவ்வொரு சந்திப்பும்...
என்
அடுத்த பகல்களுக்கு
வெளிச்சம் பூசியிருக்கிறது.....
இந்த
பூமிக்கு வரும் முன்பே
என் தாயின் கருவறையில்
என்னுடன் உருவான
நீ மட்டுமே
என் இறுதிப்பயணத்திலும்
உடன் வர தகுதியானவன்...
உடன்பிறந்தவனே....
பெருங்கூட்டங்களில் தனிமை உணர்ந்த எனக்கு
தனித்திருக்கும் வேளைகளில்
தோள் கொடுத்த தமயனே....
நீ இருக்கும் வரை
எனக்கு தனிமையில்லை..
செல்வம்
துயரங்களின் தோழனே....
உன்
துணையுடன்தான்
என் எல்லாவற்றையும்
நான் கடந்திருக்கிறேன்...
நான்
தனியாள் இல்லை
என்பதனை எனக்கு
உணர்த்திச்செல்லும்
தாய்கரங்களாய்
என் தலைகோதியது நீதான்
இரவுகளின் இருட்டுகளில்
நிகழ்ந்த
நமது ஒவ்வொரு சந்திப்பும்...
என்
அடுத்த பகல்களுக்கு
வெளிச்சம் பூசியிருக்கிறது.....
இந்த
பூமிக்கு வரும் முன்பே
என் தாயின் கருவறையில்
என்னுடன் உருவான
நீ மட்டுமே
என் இறுதிப்பயணத்திலும்
உடன் வர தகுதியானவன்...
உடன்பிறந்தவனே....
பெருங்கூட்டங்களில் தனிமை உணர்ந்த எனக்கு
தனித்திருக்கும் வேளைகளில்
தோள் கொடுத்த தமயனே....
நீ இருக்கும் வரை
எனக்கு தனிமையில்லை..
செல்வம்
Subscribe to:
Posts (Atom)