ஒவ்வொரு விடியலும் கடந்து போகிறது காத்திருப்புகளின் இடைவெளிகளில்....
எங்கள் மகரந்தங்களை அடைகாத்திருக்கும் செவ்விதழ்கள் ஒரு நாள் மலர்ந்திடும் என்ற நம்பிக்கை வாசத்தில்
நிழல் பிம்பங்கள்....
எங்கள் ஜன்னல் கம்பிகளில் படர்ந்து வளர்ந்திருப்பதெல்லாம் எதிர்பார்ப்புகளின் கண்ணீர் துளிகளே....
எங்கள் உணர்வுகளுக்குத்
தெரிவதில்லை எங்கள்
ஏழ்மையின் விலாசங்கள்....
தலையணை கனவுகள் மட்டுமே இரவுகளின் நீளங்களை நீட்டிக்கிறது...
வைகறை நிராகரித்த வசந்தங்களில் நாங்கள் இன்னும்.....
மலராத மொட்டுகள்
செல்வம்
No comments:
Post a Comment