Friday, June 8, 2018

சொடக்கான்....

விரல்களின் இறுக்கங்களைத் தளரச்செய்யும் தாரக தந்திரம்....

அது என்னவோ....

நீ விரல் பிடித்து ஒடித்துச் செல்லும் சொடக்குகளின் சத்தங்கள் மட்டும் உன் பெயர் சொல்லியே ஒலிக்கிறது....

சில நேரங்களில்....

வலி உயிர்போகும் மனசு மட்டும் சிரித்துக்கொள்ளும்...
இந்த மெல்லிய விரல்களில் இருந்தா இந்த வலி.....

ஊரிலிருந்து திரும்பியதும்....

ஊர்கண்ணே பிள்ளைமேலத்தான்...
என்று

உச்சி முகர்ந்து
முகம் தழுவி நீ போடுவாயே உன் நெற்றிப்பொட்டில் வைத்து ஒரு சொடக்கு.....

சத்தியமாய் சொல்கிறேன்....

அதில் தெரிவது....
என் மீதிலான கண்ணாறல்ல...

நீ என் மீது வைத்திருக்கும்
பாசம்....

செல்வம்

No comments:

Post a Comment