Thursday, June 7, 2018

பிறழ்ந்த பிறவி

ஏதோ ஒரு புள்ளியில் நாங்கள் பிறழ்ந்து போகிறோம்....

மங்கையர்களின் உவமானமாகிய எங்களின் உயிர்கள் பறிக்கப்படுவதே தப்பென்று உணராத சமூகத்தில் நாங்களும் அடிமைகளே...

கடவுள் கேட்காத பூவும் மாலையும்.....உனக்கென்ன வந்தது....
உன் விரல்களை வெட்டிக்கொடுப்பாயா....?

எந்த சடலம் கேட்டது மாலையும் மரியாதையும்....
உயிருடன் உலவும்போது மதிக்காத மனிதனுக்கு மரணத்தில் மட்டும் எதற்கு இந்த வெளி வேஷம்....

நாங்களும் இரவில் உறங்கி விடியலில் மலர்பவர்கள்தான்....

எங்கள் வாசங்களைக் கற்சிலையிலும் உயிரற்ற சடலத்திலும் பூசிவிடாதீர்கள்.....

நாங்கள் தினமும் மலரும் உயிர்மலர்கள்....ஒற்றுமையை உயிர்ப்பிக்கும் பூ மாலைகள்....

எங்களுக்கும் உயிர் சிலைகளும் உயிர் தோள்களும் கொடுங்கள்....மாலையாக....

ராமனைப் போன்ற உயர்ந்த மனித கழுத்தில்லாவிட்டாலும் ராவணன் போன்ற அரசியல்வாதி கழுத்தாவது கொடுங்கள்....

நாங்கள் இறப்பதற்கு முன் இன்னொரு முறை வாழவேண்டும்.....

*செல்வம்*

No comments:

Post a Comment