Friday, June 1, 2018

உடன்பிறப்பு

என்
துயரங்களின் தோழனே....

உன்
துணையுடன்தான்
என் எல்லாவற்றையும்
நான் கடந்திருக்கிறேன்...

நான்
தனியாள் இல்லை
என்பதனை எனக்கு
உணர்த்திச்செல்லும்
தாய்கரங்களாய்
என் தலைகோதியது நீதான்

இரவுகளின் இருட்டுகளில்
நிகழ்ந்த
நமது ஒவ்வொரு சந்திப்பும்...
என்
அடுத்த பகல்களுக்கு
வெளிச்சம் பூசியிருக்கிறது.....

இந்த
பூமிக்கு வரும் முன்பே
என் தாயின் கருவறையில்
என்னுடன் உருவான
நீ மட்டுமே
என் இறுதிப்பயணத்திலும்
உடன் வர தகுதியானவன்...

உடன்பிறந்தவனே....

பெருங்கூட்டங்களில்  தனிமை உணர்ந்த எனக்கு
தனித்திருக்கும் வேளைகளில்
தோள் கொடுத்த தமயனே....

 நீ இருக்கும் வரை
எனக்கு தனிமையில்லை..

செல்வம்

No comments:

Post a Comment